‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன். அதையடுத்து திருட்டுப்பயலே, நான் அவனில்லை உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால் அவர் நடித்த கவிதாலயாவின் கிருஷ்ணலீலை படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து ஜீவனின் மார்க்கெட் சரிந்தது. அதனால் சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும், அதிபர், ஜெயிக்கிற குதிரை ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். இதில் அதிபர் வெளியாகி வெற்றி பெறவில்லை. அதையடுத்து நடித்து வந்த ஷக்தி சிதம்பரத்தின் ஜெயிக்கிற குதிரை படம் பைனான்ஸ் பிரச்சினையால் கிடப்பில் கிடக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடரவே இல்லை.
இந்த நிலையில், ஜீவனை சில டைரக்டர்கள் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்க அழைத்தவண்ணம் உள்ளனர். ஆனால், அவரோ, மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். குறிப்பாக, நான் அவனில்லை, திருட்டுப்பயலே போன்று நெகடீவ் ஹீரோவாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் கேரக்டர் ரோல்களில் நடிக்க என்னை வற்புறுத்தாதீர்கள் என்று தேடிச்சென்ற வாய்ப்புகளை திருப்பி அனுப்பி விட்டார். ஆக, தற்போதைய நிலவரப்படி ஜீவனை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராத நிலையிலும், தனக்கு ஹீரோ சான்ஸ் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் அவர்.