போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் - சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை தயாரித்தார். அப்படத்தின் கமர்ஷியல் வெற்றியைத் தொடர்ந்து , பின்னர் விமலை தனி ஹீரோவாக வைத்து தேசிங்குராஜா என்ற படத்தை தயாரித்தார். அதன் பிறகு, விமல், சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் மாப்ள சிங்கம் என்ற படத்தைத் தயாரித்தார். மாப்ள சிங்கம் படம் ரெடியாகி நீண்டகாலமாக மேலாக கிடப்பில் கிடக்கிறது. மாப்ள சிங்கம் படத்தை குறித்த நேரத்தில் வெளியிடாமல் கிருமி, பசங்க-2 என மற்ற பட நிறுவனங்கள் தயாரித்த படங்களை வாங்கி வெளியிட்டு வந்தார் மதன். இதனால் அவர் மீது கடும் வருத்தத்தில் இருந்தா விமல்.
இந்நிலையில், விமல் நடித்த மாப்ள சிங்கம் படத்தை மார்ச் 11ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார் மதன். ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாப்ள சிங்கம் படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இப்படத்துக்கு யு சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். மாப்ள சிங்கம் படம் தற்போது மார்ச் 11ம் தேதி வெளியாகும் என்று எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் அறிவித்திருப்பதால் விமல் படத்துக்கு விமோசனம் கிடைதிருக்கிறது.