இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
விதவிதமான பேய்கள்தான் இப்போது கோலிவுட் ஸ்டைல். 13ம் பக்கம் பார்க்க என்ற படத்தை இயக்கிய இயக்குனர் புகழ்மணி என்பவர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார். அது, ஹீரோவை 13 பேய்கள் கூட்டணி அமைத்து தாக்குகிறதாம். படத்தின் பெயர் வெள்ளிக்கிழமை 13ந் தேதி. ஏதாவது ஒரு மாதத்தில் 13ந் தேதி வெள்ளிக்கிழமையில் வருமாம். அது பேய்களுக்கு விசேஷமான நாளாம். பேய் தோஷம் (இது என்னய்யா புதுசா இருக்கு) பிடித்த ஹீரோவுக்கு 13ந் தேதி வெள்ளிக்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். பேய்கள் தாக்காமல் இருக்க பல சித்து வேலைகளைச் செய்து வைத்து விட்டு மணமேடையில் உட்காருகிறார் மாப்பிள்ளை. எல்லாவற்றையும் தாண்டி மணமகளாக வந்து உட்காருகிறது பேய். அதன் பிறகு என்ன நடக்கும் பேய்களின் கதகளி ஆட்டம்தான்.
கோவிந்த் ஸ்டூடியோ சார்பில் விக்ரம் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரத்தன் மவுலி, தெலுங்கு நடிகை ஸ்ராவியா, சுஜாகுமர், ராம்ஜி, சித்ரா லட்சுமணன், எம்.எஸ்.பாஸ்கார், லிவிங்ஸ்டன், சாம்ஸ், வையாபுரி, ரேகா, நிரோஷா, மதுமிதா நடிக்கிறார்கள். தாஜ்நூர் இசை அமைக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்காக 150 அடி உயர அம்மன் சிலை அமைத்து கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி இருக்கிறார்கள். அடுத்த மாதம் மிரட்ட வருகிறது.