‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012 -ல் வெளியான படம் கும்கி. சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படத்தில்தான் லட்சுமி மேனன் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு டி.இமானின் இசை மிகப்பெரிய காரணமாக அமைந்தது. அந்தளவுக்கு அனைத்துப் பாடல்களையும் அற்புதமாக உருவாக்கி இருந்தார் இமான்.
தற்போது இரண்டாம் பாகம் எடுக்கும் சீசன். எனவே, தான் இயக்கிய வெற்றிப்படமான 'கும்கி'யின் இரண்டாம் பாகத்தை இயக்க இப்போது முடிவு செய்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன். நடிகர், நடிகைகள், தயாரிப்பு நிறுவனம் முதலான விஷயங்களை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிரட்டு படத்தை இயக்கியுள்ள பிரபு சாலமன் அப்படத்தின் போஸ்ட புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிசியாக இருக்கிறார்.
அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு கும்கி-2 படத்தின் வேலைகளை துவங்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையில், கும்கி - 2 படத்தை வேறு தயாரிப்பாளருக்கு பிரபு சாலமன் இயக்குவதாக இருந்தால், கும்பி படத்தை தயாரித்த லிங்குசாமி கும்கி என்ற தலைப்பை பயன்படுத்த அனுமதி தருவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.