‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இறுதிச்சுற்று. துரோகி படம் தோல்வியடைந்த போதும் இந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக இந்திய அளவிலான சினிமா ஜாம்பவான்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் சுதா. விளையாட்டை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்தபோதும் இதுபோன்று மனதை தொட்ட படத்தை பார்த்ததில்லை என்று முன்னணி டைரக்டர்களே மனம் திறந்து பாராட்டி சுதாவை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அதோடு, தமிழ் சினிமாவில் ஹிட் மூவி கொடுத்த முதல் பெண் டைரக்டர் என்கிற பெருமையையும் டைரக்டர் சுதா பெற்றிருக்கிறார்.
இந்தநிலையில், அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகளும் தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கைதான் சுதா இயக்குவார் என்று கூறப்படுகிறது. காரணம், அந்த படத்தைப்பார்த்து அசந்து போன தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், தன்னை வைத்து தெலுங்கில் இறுதிச்சுற்று படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். அதனால், சுதாவின் அடுத்த படம் இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். மேலும், அந்த படத்திலும் ரித்திகா சிங்கே நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.