ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இயக்குனர் தங்கர்பச்சான் அம்மாவின் கைபேசி என்ற படத்தை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டார். தற்போது தன் சொந்த அம்மா பற்றிய ஆவணப்படம் ஒன்றை என் அம்மா என்ற தலைப்பில் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். 16 நிமிடங்கள் ஓடக்கூடியது இந்தப்படம். இது குறித்து தங்கர்பச்சான் கூறியதாவது: எத்தனையோ பேரை நான் படம் பிடித்திருக்கிறேன். என் அம்மாவை படம் பிடிக்க வேண்டும் என ஒருநாள் யோசனை வந்தது. அன்றிலிருந்து ஊருக்குச் செல்லும் போதெல்லாம் அவளை படம் எடுத்து சேகரித்து வைத்திருந்தேன். அவற்றை தொகுத்து ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறேன். அப்படி நான் செய்யாமல் போயிருந்தால்13 வயதில் பருவமெய்தி, 14 வயதில் கூத்து கலைஞனை திருமணம் செய்து வாழ்ந்த அவர் வாழ்க்கை வருங்கால சந்ததிக்கு தெரியாமலே போயிருக்கும். 91 வயது வரை எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் வாழ்ந்து மறைந்தவர் அவர். ஒவ்வொருவரும தங்கள் அம்மாவை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முயற்சி. இது என் அம்மா பற்றிய ஆவணப்படம் அல்ல ஒவ்வொரு அம்மாக்களின் ஆவணப்படம் என்கிறார் தங்கர்பச்சான்.