போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கும் படம் காதலும் கடந்த போகும். இது ஒரு சவுத் ஆப்பரிக்கன் மூவியின் உரிமம் பெற்று தழுவி எடுக்கப்படும் காதல் படம். விஜய்சேதுபதி, பிரேமம் படத்தில் நடித்த மடோனா செபாஸ்டின் நடிக்கிறார்கள். வில்லனாக சமுத்திரகனி நடிக்கிறார். காமெடி, அதிரடி கலந்த காதல் படம்.
“காதல் எப்படி உருவாகிறது என்பதுதான் படத்தின் கதை. காதல் உருவானதும் படம் முடிந்து விடும் அப்படியான ஒரு திரைக்கதை. 80 சதவிகித கதை ஹீரோ, ஹீரோயினைச் சுற்றியே இருக்கும். காதல், காமெடி படம் என்றாலும் இரண்டு அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கிறது. அதில் ஒரு காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி தன் நண்பர்களுடன் வில்லன் கூட்டத்தை துரத்துவார். வில்லன்கள் ஒரு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் நுழைந்து விடுவார்கள். விஜய் சேதுபதி அவர்களை துரத்திக்கொண்டு அந்த கட்டிடத்திற்குள் சென்று அவர்களை அடித்து போட்டுவிட்டு கட்டிடத்தை விட்டு வெளியே வருவது வரை ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை ஹரி மாஸ்டரும், தினேஷ் மாஸ்டரும் இணைந்து வடிமைத்திருக்கிறார்கள். பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே படப்பிடிப்பு நடத்தினோம். வாழ்க்கையயை இயல்பாக எதிர்கொள்ளுங்கள், காதல் அதுவாக வந்து விட்டு போகட்டும் என்பதுதான் படத்தில் சொல்ல வருகிற விஷயம்” என்கிறார் நலன் குமாரசாமி.