‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல் இயக்கத்தில் காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படம் நீண்டகாலமாக தயாரிப்பில் இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த கார்த்திக்கு, நாகார்ஜூனா உடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், காஷ்மோரா படத்தை கிடப்பில் போட்டார்.
தமிழில் தோழா என்ற பெயரில் வெளியாக உள்ள அந்த தெலுங்குப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்தி அதை முடித்துவிட்டு வந்ததும் காஷ்மோரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இதற்கிடையில், 'காஷ்மோரா படத்தின் பட்ஜெட் 60 கோடி என்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வந்தது.
இப்படத்திற்காக சுமார் 15 செட் போடப்பட்டதாகவும் அதனால் 60 கோடியாக பட்ஜெட் எகிறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழு தரப்பு மறுத்துள்ளது. பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டது உண்மை, ஆனால் இவ்வளவு செலவு ஆகவில்லை என்கிறார்கள். அதேசமயம் கார்த்தி நடித்து வரும் பெரிய பட்ஜெட் படம் இது என்கிறார்கள்.