‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு படம் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அந்தப் படம் தள்ளிப் போவது திரையுலகில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு. தற்போது வசூலை அள்ளித் தரும் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' படம் கூட இதுவரை பல முறை தேதி அறிவிக்கப்பட்டு எதிர்பாராமல் தள்ளிப் போனது. பொதுவாக இப்படி தள்ளிப் போகும் படங்களுக்கென்று வேறு விதமான இமேஜ் ஏற்படுவது வழக்கம். அந்த இமேஜையும் உடைத்தெறிந்து அந்தப் படங்கள் வெற்றியடைந்தால் அது சாதனைதான்.
அடுத்த வாரம் 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட 'அஞ்சல' திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக படத்தை வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக 'டீ பாடல்' ஒன்றையெல்லாம் வெளியிட்டு நிறையவே விளம்பரப்படுத்தினார்கள். 'மஞ்சப் பை' படத்திற்குப் பிறகு விமல் நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்து வெளிவருவதாக இருந்த 'அஞ்சல' படமும் தள்ளிப் போயுள்ளது. விமல் நடித்த மற்றொரு படமான 'மாப்பிள்ளை சிங்கம்' படம் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் வெளியாகாமலே உள்ளது.
பிரச்சனைகள் ஏதும் இருந்தால் அவற்றையெல்லாம் முடித்து விட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர்களும், வெளியிடுபவர்களும் அறிவிக்கலாமே என்று சம்பந்தப்பட்ட நடிகர்களும், அவர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.