போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஹாலிவுட்டின் இளம் கவர்ச்சி கன்னி ஜெனிபர் லாரன்ஸ், இவரின் “த ஹங்கர் கேம்ஸ்” படம் உலக புகழ் பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து உள்ளது. இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்தை இயக்கப்போகிறாராம் ஜெனிபர் லாரான்ஸ். 2012ல் வெளியான பிரபல பிளாக் காமெடி நாவல் ஆன ப்ராஜெக்ட் டெலிரியத்தை தான் அவர் படமாக இயக்கப்போகிறாராம்.
25 வயதாகும் ஜெனிபருக்கு இயக்குனராக வேண்டும் என்பது சின்ன வயது கனவாம். தனது 16ம் வயதில் இருந்து இயக்குனருக்கு தேவையான பயிற்சிகளையும் பெற்று வந்துள்ளாராம். ஹாலிவுட்டில் தற்போது “பேசன்ஜர்ஸ்”, மற்றும் “எக்ஸ் மேன் அப்போகலிப்ஸ்” படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தனது படத்திற்கான வேலைகளையும் கூடவே தொடங்கியுள்ளார். இவரது முயற்சிக்கு ஹாலிவுட் வட்டாரங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.