‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ''24''. இந்தியில் 13பி, தமிழில் யாவரும் நலம், தெலுங்கில் இஷ்டம், மனம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், திரு ஒளிப்பதிவு செய்கிறார். சமந்தா, நித்யா மேனன் ஹீரோயின்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்க்கலாம்...
* இது ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் சயின்ஸ் பிக்ஸ்சன் படம். இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்காமல் நடந்தால் எப்படி இருக்கும் என்கிற சுவாரஸ்யம் நிறைந்த படம்.
* இதில் சூர்யா மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார். அதில் ஒன்று ஆத்ரேயா என்கிற வில்லன் கேரக்டர். எந்த காம்பரமைசும் செய்து கொள்ளாமல் கொடூரமான வில்லனாக சூர்யா நடிக்கிறார். மற்றொரு கேரக்டர் வழக்கமான லவ்வர் பாய். இன்னொரு கேரக்டர் பற்றிய செய்திகள் படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
* வில்லன் கேரக்டருக்காக சூர்யா 4 மணி நேரம் மேக்அப் போட்டிருக்கிறார். லவ்வர் பாய் சூர்யா தவிர வில்லன் ஆத்ரேயா, மற்றும் சஸ்பென்ஸ் கேரக்டர்களில் இதுவரை பார்க்காத சூர்யாவை பார்க்கலாம். பிரபல ஹாலிவுட் மேக்அப் வுமன் க்ளோர்க்தான் சூர்யாவை மாற்றி இருக்கிறவர்.
* படத்தின் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறவர் பாலிவுட்டை சேர்ந்த அமித்ரே. ஹைதர், தல்வார், ஹீரோ படங்களுக்கு பிரமாண்ட செட் போட்டவர். இந்தப் படத்துக்கும் நிறை செட் போட்டிருக்கிறார். குறிப்பாக ஒரு விஞ்ஞானியின் லேப் செட் பேசப்படுவதாக இருக்கும்.
* படத்தில் 20 நிமிடங்களுக்கு விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. கிராபிக்ஸ் பணிகளை பிரான்ஸ் ஆன், விஷூவல் எபெக்ட்சுக்கு ஜூலியன் என்ற ஹாலிவுட் தொழில்நுட்ட கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.
* கபாலி படத்துக்கு சண்டை காட்சிகள் அமைக்கும் அன்பு, அறிவுதான் இந்தப் படத்திலும் சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். சூர்யா இதுவரை இல்லாத அளவிற்கு உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு ரெயில் சண்டைக்காட்சி பிரமிப்பை உண்டாக்கும். டூப் போடாமல் ஓடும் ரெயிலில் இருந்து குதித்து நடித்திருக்கிறார் சூர்யா.
* படத்தில் மொத்தம் 5 பாடல்கள். அனைத்தையும் போட்டு கொடுத்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான். பின்னணி இசைதான் பாக்கி, சூர்யாவின் காரிலும், காதிலும் ஒலித்துக் கொண்டிருப்பது ரகுமானின் இந்தப் பட பாடல்கள்தான்.
* சமந்தா லவ்வர் பாய் சூர்யாவின் காதலி. நல்ல கெமிஸ்ட்ரியுடன் லவ் போர்ஷனில் கலக்கி இருக்கிறார்கள். நித்யா மேனனுக்கு கேரக்டர் ரோல். நடிப்புக்கு முக்கியத்தும் தந்திருக்கிறார்.
படம் கோடை விடுமுறையில் வெளிவருகிறது. அதாவது 2016 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளிவருகிறது.