‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 24வது படமாக சமீபத்தில் வெளியான ஸ்பெக்டர் திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானாலும் பாக்ஸ் ஆபிஸ் நம்பர் ஒன் தான். அதுமட்டுமல்ல, இப்போ கின்னஸ் ஸ்பெக்டராக மாறியுள்ளது.
ஆம், படத்தின் ஒரு சண்டைக் காட்சிக்காக உலக சினிமாக்களிலே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெடி விபத்துக் காட்சியை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். அதற்கு தான் கின்னஸ் சாதனை விருது. நீண்ட கிஸ்க்கு சர்ச்சை ஏற்பட்ட ஸ்பெக்டர் கின்னஸ் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த பிரமாண்ட வெடி விபத்துக் காட்சியை மொராக்கோவில் உள்ள எர்போட் என்ற இடத்தில் படம் பிடித்துள்ளனர். இந்தக் காட்சிக்காக 8418 லிட்டர் மண்ணெண்ணெய், 33 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த அளவையும் கணக்கிட்டால் அது 68.47 டன் டிஎன்டி வெடிபொருளுக்கு சமமாகுமாம். ஆனால் இந்த பிரமாண்ட வெடிப்பு வெறும் 7.5 விநாடிதான் வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் சீனாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. கதாநாயகன் டேணியல் கிரேக், லியா செய்டோ, தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.