ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஜயகாந்த், அவரது மகன் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் ''தமிழன் என்று சொல்''. இது ஒரு பேண்டஸி படம். இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பாலிவுட் நடிகை ஸோயா அப்ரோஷ் முன்னணியில் இருக்கிறார். லக்னோவைச் சேர்ந்த இவர் ஹம் சாத் சாத் ஹெய்ன் படத்தில் அறிமுகமாகி இந்திப் படங்களில் நடித்துவருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்த தி எக்ஸ்போஸ் மிகவும் பிரபலம். ஸோயா நடிப்பது பற்றி இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாலம்.
இவர் தவிர படத்தின் இன்னொரு ஹீரோயின் இருக்கிறார். அதற்கு திஷா பதானியுடன் பேசி வருகிறார்கள். இவர் ஃபாண்ட்ஸ் பவுடரின் மாடல். தற்போது தெலுங்கில் லோபர் என்ற படத்தில் வருண் தேஜுடன் நடித்து வருகிறார். விஜயகாந்தின் மனைவியாக நடிக்க அவருடன் நடித்த சில ஹீரோயின்களுடன் பேச்சு நடந்து வருகிறது.