ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
எத்தனையோ ஜோடிகள் நாங்கள் காதலிக்கவில்லை, நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லிவிட்டு கடைசியில் தாங்கள் காதலர்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். மீண்டும் அப்படி ஒரு சம்பவம் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் காதல் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
அவர்களிருவரைப் பற்றி வந்த காதல் கிசுகிசுக்களை இருவருமே மறுத்தார்கள். இப்போது அந்த கிசுகிசுவே உண்மையாகிவிட்டது. இருவருக்கும் இன்று(நவம்பர் 8ம் தேதி) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பாபி சிம்ஹா, காதலில் சொதப்புவது எப்படி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி ஜிகர்தண்டா படத்தில் தேசிய விருது பெறும் அளவிற்கு குறுகிய காலத்தில் வளர்ந்துவிட்டார். ரேஷ்மி மேனன் இனிது இனிது படம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் எந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் இருவரும் உறுமீன் படத்தில் சேர்ந்து நடித்த போது காதலிக்க ஆரம்பித்து இப்போது திருமணம் வரை வந்துவிட்டார்கள்.
பாபி சிம்ஹா தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர், ரேஷ்மி மேனன் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர். இருவரும் தமிழ்ப் படத்தில் நடிக்கும் போது காதலர்களாகியுள்ளார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு திரையுலகத்தினர் வாழ்த்து சொல்ல உள்ளனர்.