நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
புலி படத்தை முடித்து விட்டு அட்லி இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். டயலாக் காட்சிகளை முதலில் படமாக்கியவர்கள் அதற்கிடையே வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களையும் படமாக்கி வந்து விட்டனர். அந்த வகையில், இன்னும் 25 நாட்களில் விஜய் 59வது படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று அந்த யூனிட்டை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், விஜய்யின் 60வது பட வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தான் விஜய்யின் அடுத்த படத்தை குஷி-2 என்ற பெயரில் இயக்குகிறார். தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட அவர், லொகேசன் உள்ளிட்ட மற்ற வேலைகளில் இறங்கி விட்டாராம்.
மேலும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படத்தை தயாரித்த ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்ஸ் சந்திரபிரகாஷ் ஜெயின்தான் அந்த படத்தை தயாரிக்கிறாராம். காரணம், தலைவா படத்தை தயாரித்த அவருக்கு பல கோடிகள் நஷ்டமாகி விட்டதாம். இதை ஈடுகட்டத்தான் இப்போது நடித்துக்கொடுக்கிறாராம் விஜய். டிசம்பரில் 59வது படத்தின் வேலைகள் முடிந்து விடும் என்பதால், ஜனவரியில் குஷி-2 படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.