‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்தியத் திரையுலகில் அறிமுகமாகி பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அதே இளமையுடனும் இருக்கும் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நம்பர் 1 நாயகியாக சில வருடங்கள் இருந்தவர் தற்போதும் முன்னணி நடிகையாகவே இருக்கிறார். நேற்று அழகான பிங்க் நிற புடவையுடன் அவருடைய டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அந்த ஃபோட்டைவைப் பார்த்ததும் த்ரிஷாவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சார்மி ஒரு கேள்வி கேட்டு அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
“திருமணமான பிறகும் நீ இவ்வளவு அழகாய்த்தான் இருப்பாய் த்ரிஷா, நான் உன்னை திருமணம் செய்து கொள்ளட்டுமா” என த்ரிஷாவைப் பார்த்து ஒரு அதிர்ச்சியான கேள்வியைக் கேட்டார் சார்மி. அதற்கு, “எப்போதுமே அதற்கு என் பதில் ஆமாம்” என்று சொல்லி த்ரிஷாவும் பதிலுக்கு அதிர்ச்சியடைய வைத்தார். இவர்களுக்கிடையில் நடிகை நிகிஷா பட்டேலும் சேர்ந்து கொள்ள “நான் திருமணத்திற்குத் தயாராகிவிட்டேன் என்பதைத்தான் சார்மி அப்படி குறிப்பிடுகிறார்,” என அவருக்கு த்ரிஷா பதிலளித்தார்.
அனைவரும் பார்க்கும் டுவிட்டரில் இப்படி மூன்று ஹீரோயின்கள் விவாதித்துக் கொண்டது நேற்று அவர்களது டுவிட்டரைப் பார்த்தவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகியிருக்கும்.
என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா....!