கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் | பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் |
அஜீத் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பம் படத்தில் நடித்தார். அப்போது பாய்ந்து வரும் காரின் முன் பக்க பேனட்டில் விழுந்து காருக்குள் நுழைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டபோது அவருக்கு காலில் அடிபட்டது. அப்போது செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் காலின் உள்பக்க தசைநார்கள் எலும்பில் மாட்டிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் சில நாள் கட்டுப்போட்டு கொண்டு நடந்தார். நிரந்தர தீர்வுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அடுத்தடுத்து படங்கள் இருந்ததால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போது தன்னையும் சமாதனம் செய்து கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் வேதாளம் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் சென்னை பின்னி மில்லில் செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித் நடித்து வந்தார். நேற்று முன்தினம் படப்பிடிப்பு நடந்தபோது நடன மங்கைளுடன் ஆடிக்கொண்டிருந்த அஜீத் திடீரென காலை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். காலை பிடித்துக் கொண்டு வலியால் துடித்தார்.
பதறி அடித்து ஓடிவந்த படக்குழுவினர் அஜீத்தை கேரவனுக்குள் தூக்கிச் சென்றனர். அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் அஜீத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக சிகிச்சை அளித்து வலியை குறைத்த டாக்டர்கள். இவ்வளவு நாட்கள் ஆபரேஷன் செய்யாததே தவறு .இனி உடனே ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். வேதாளம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்து விட்டு ஆபரேஷன் செய்து கொள்ளவதாக உறுதியளித்தார். அமெரிக்காவில் அஜீத்துக்கு ஆபரேஷன் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.