‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'வேலையில்லா பட்டதாரி' படக் குழுவினரின் இரண்டாவது படமாக அந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக்கப்படுவதாகச் சொல்லப்படும் படத்திற்கு நேற்று 'தங்க மகன்' என்ற தலைப்பை அறிவித்துள்ளார்கள். 'பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை' ஆகிய ரஜினிகாந்த் நடித்த படங்களின் பெயர்களில் தன் படங்களுக்கு இதற்கு முன்னும் தலைப்பு வைத்தவர்தான் தனுஷ். இப்போது மீண்டும் ரஜினிகாந்த் நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த 'தங்கமகன்' படத்தின் பெயரை வைத்துள்ளார்.
வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். கடந்த வாரம்தான் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களின் பெயர்களைத் தங்களது படங்களுக்கு வைப்பதை தற்போது சில ஹீரோக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே பாபி சிம்ஹா நடிக்க 'வீரா' என்ற படமும், ஜீவா நடிக்க 'போக்கிரிராஜா' என்ற படமும் தயாராகி வருகின்றன. விஜய் நடித்து வரும் புதிய படத்திற்கும் கூட 'மூன்று முகம்' எனப் பெயர் வைக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
தமிழ் சினிமாவில் தலைப்புப் பஞ்சம் அதிகமாக இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.