ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரும் அரசியல் பிரபலமுமான பாலகிருஷ்ணா தனது 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் நடித்து வருகின்றார். ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் டிக்டேட்டர் படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன் பாலகிருஷ்ணவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் சங்கராந்தி பண்டிகை அன்று இப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்காக இப்படத்தின் படப்பிடிப்புகளை துரிதப்படுத்தியுள்ளது.ஹைதராபாத்,யுரோப் போன்ற இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தின் புறநகர் பகுதிகளில் நடைபெறவுள்ளது. அங்கு இப்படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. கடந்த விநாயக சதுர்த்தியில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பாடல் ரசிகர்களிடம் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.