'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
பாடகி ஜென்சியை நினைவிருக்கிறதா? 1978 முதல் 1982 வரை இளையராஜாவின் இசையில் காலத்தால் அழியாத பல காவிய பாடல்களை பாடியவர். "ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்...", "தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்..." போன்ற உள்ளத்தை உருக்கும் பாடல்களை பாடியவர்.
மலையாள மேடைகளில் பாடிக் கொண்டிருந்தவர் ஜேசுதாஸ் மூலம் இளையராஜாவுக்கு அறிமுகமாகி இசை உலகில் வலம் வந்தவர். புகழின் உச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். கொச்சி அருகில் உள்ள மாட்டான்சேரியில் உள்ள குஜராத்தி பள்ளியில் இசை ஆசிரியையாக பணியில் சேர்ந்தவர் அண்மையில் ஓய்வு பெற்றார். கணவர் கிரகேரி தாமஸ் பிசினஸ் மேன், ஒரு மகன் அமெரிக்காவில் படிக்கிறார். மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.