இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் தினத்தில் மீடியம் பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒதுங்கி வழிவிடுவதுதான் வழக்கம். இதற்கு மாறாக, விஜய் நடித்த புலி படம் வெளியாகும் அதே தினத்தில் தைரியமாக களத்தில் குதிக்கிறது ஒரு படம். முதலில் 'டெய்சி' என்று தலைப்பிடப்பட்ட படம் பிறகு, அஜித் படப் பாடல் வரியான உனக்கென்ன வேணும் சொல்லு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்ததாக சொன்னார்கள்.
உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, மைம் கோபி முதலானோர் நடித்துள்ளனர். அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் படித்த ஸ்ரீநாத் ராமலிங்கம் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை வாங்கி வெளியிட உள்ள பிரபல விநியோகஸ்தர் நல்ல நேரம் பார்த்து வருகிற விநாயக சதுர்த்தி அன்று அதாவது செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் என்ன வேடிக்கை தெரியுமா?