போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தனது 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் அஞ்சலி மற்றும் சோனல் சௌகன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஐதராபாத்தில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் சங்கராந்தி பண்டிகை அன்று வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர். டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் பிரமோற்சவம் படம் 2016 சங்கராந்தி பண்டிகை அன்று திரையிடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி வரும் மா நானாகி பிரேமதோ படமும் 2016 சங்கராந்தி பண்டிகை அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போட்டியில் நடிகர் பாலகிருஷ்ணாவின் டிக்டேட்டர் படமும் இணைந்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.