துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
சிறுத்தை, வீரம் படங்களின் இயக்குநர் சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் பெயர், இம்மாதம் 15ம் தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்குமார் நடித்து வரும் படம் தல 56 என்ற படம். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கோல்கட்டா மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுளளது.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். இந்த படத்தில், முதன்முறையாக, அஜித்துடன் சூரி இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு, தற்காலிகமாக, தல 56 என்று பெயரிடப்பட்டு, சூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பெயர், வரும் 15ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.