போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய்யின் புலி படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். முக்கிய ராணி வேடத்தில் ஸ்ரீதேவியும், தளபதியாக சுதீப்பும் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் படம் முழுக்க வரும் காமெடியன்களாக தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.
மற்றபடி அட்டகத்தி நந்திதா ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். மொத்தம் புலி படத்தில் அவர் 3 நாட்கள் மட்டுமே நடித்தார். அவரைப்போலவே மாரியில் தனுசுடன் ஷோலோ காமெடியனாக நடித்த ரோபோ சங்கரும் சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், படம் முழுக்க வந்தவர்கள் தங்களது கதாபாத்திரங்களைப்பற்றி பில்டப் கொடுப்பதை விட நந்திதாவும், ரோபோ சங்கரும் கொடுக்கிற பில்டப்தான் தாங்கமுடியவில்லை என்று கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.
அதாவது, நந்திதா கூறும்போது, விஜய்யைப் போன்று ஒரு அற்புதமான நடிகரை நான் பார்த்ததில்லை. அந்த வகையில் விஜய்க்கு நானும் ஒரு ஹீரோயினி என்பதை நினைக்கையில் சந்தோசமாக உள்ளது என்று தன்னை சந்திக்கும் ஒவ்வொரு சினிமாக்காரர்களிடமும் சொல்லிக்கொண்டு வருகிறார். அதேபோல் ரோபோ சங்கரோ, நான் எத்தனையோ காமெடி வேடங்களில் நடித்துவிட்டேன். ஆனால் புலி படத்தில் நான் நடித்துள்ள வேடத்தில் இதுவரை எந்த நடிகரும் நடித்ததில்லை. அப்படியொரு வித்தியாசமான வேடம். அதோடு விஜய் சாரே எனது நடிப்பை பலமுறை கைதட்டி ரசித்தார் என்றும் பெரிய பில்டப் கொடுத்து வருகிறார்.