‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜயசேதுபதியுடன் கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். அதையடுத்து யட்சன், விழித்திரு, யாக்கை, கிரகணம், பண்டிகை ஆகிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில், யாக்கை படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று யாட்சன் படத்தில் நடிக்க ஆர்யா கால்சீட் கொடுத்து விட்டார். அவரை அப்போது விட்டால் அடுத்தபடியாக வேறு படங்களில் நடிக்க சென்று விடுவார் என்பதால், யட்சனில் நடித்து விட்டு யாக்கை படத்தை தொடருமாறு அப்படத்தின் டைரக்டரான கிருஷ்ணாவின் அண்ணன் விஷ்ணுவர்தன் கூறினார். அதனால் யாக்கை படக்குழுவுடன் கேட்டுக்கொண்டு யாட்சனில் முழுவீச்சில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் கிருஷ்ணா.
இப்போது அப்பட வேலைகள் முடிந்துவிட்டதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாக்கை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விட்டது. அதோடு இந்த படத்தில் நடித்துக்கொண்டே கிரகணம், பண்டிகை படங்களையும் தொடரப்போகிறாராம் கிருஷ்ணா. இதில் பண்டிகை படத்தில் ஒரு சைக்கோ வேடத்தில் நடிக்கும் அவர், இதுவரையில்லாத அளவுக்கு ஒரு மாறுபட்டை பர்பாமென்ஸை வெளிப்படுத்தி வருகிறாராம்.