போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டாம் க்ருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தொடரின் ஐந்தாம் பாகமாய் வெளிவரும் திரைப்படம் 'மிஷன் இம்பாசிபிள்:முரட்டு தேசம்' (MissionImpossible: Rogue Nation). ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. அதிர வைக்கும் ஆக்ஷ்ன் காட்சிகளுக்காகவும், மெய் சிலிர்க்கும் சாகச கட்சிகளுக்காகவும் தனக்கென ரசிகரக்ளை கொண்டுள்ள மிஷன் இம்பாசிபிள் தொடரின் இந்த பாகம் ரசிகர்களுக்கு மேலும் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது.
படத்தின் மோட்டார் ஸ்டன்ட் பயிற்சியாளர் வேட் ஈஸ்ட்வுட் கூறுகையில் “எத்தகைய ஸ்டண்ட் காட்சியையையும் ஒரு படி மேல் செய்ய வேண்டும் என்று திண்ணமாய் இருப்பவர் டாம் க்ரூஸ். ' முரட்டு தேசம்' படத்தில் வரும் டாம் க்ரூசின் ரேஸ் கார் மற்றும் பைக் சேசிங் காட்சிகளை வேறெந்த சாகச வீரரையும் வைத்து டூப் போடாமல் பல நாள் பயிற்சிக்கு பின் தானே மேற்கொண்டுள்ளார். BMW நிறுவனத்தின் M3 காரின் உறுதியும், திறமும் டாம் க்ரூஸின் ஆபத்து நிறைந்த கார் சேசிங் காட்சிகளுக்கு பேருதவியாய் இருந்தது. மேலும், சுட்டெரிக்கும் வெயில் முதல் தேள் கடி என கடினமான சூழ்நிலைகளில் மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம் படத்தை படமாக்கியுள்ளோம். பற்பல தெருக்களின் குறுகிய வளைவுகளிலும் இருக்கும் சேசிங்கும் அதை தொடர்ந்து வானுயர் கட்டிடங்களின் இடையே சீரி செல்லும் ஹெலிகாப்டர் சீனும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்“ எனக் குறிப்பிட்டார் ஜேக் மேயர்ஸ்.
இந்தியாவில் Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படம் மிஷன் 'இம்பாசிபிள்: முரட்டு தேசம்' என்று தமிழில் வெளியாகவுள்ளது.