‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஷட்டர்' படத்தை தமிழில் ''நைட் ஷோ' என்ற பெயரில் தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். முன்னணி படத் தொகுப்பாளர்களில் ஒருவரான ஆன்டனி இந்த படத்தை இயக்குவன் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அனுமோல், யூகி சேது, ஐசரி கணேஷின் மகன் வருண் முதலானோர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டார்.
''என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்று கருதப்படும் பெரும்பாலான படங்களுக்கும் ஆன்டனிதான் எடிட்டர்! அந்த படங்களின் வெற்றியில் ஆன்டனிக்கு முக்கிய பங்கு உண்டு!” என்று சூர்யா சொன்னபோது மேடையில் அமர்ந்திருந்த இயக்குநர் கௌதம்மேனனின் முகம் மாறியது.
அதை கவனிக்காமல பேச்சைத்தொடர்ந்தார்... “ஒரு படத்திற்கு தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைப்பதில் டிரைலருக்கு முக்கிய பங்குண்டு! அந்த வகையில் ஆன்டனி படத்தொகுப்பாளராக பணிபுரியும் படத்தின் டிரைலர்கள் மிரட்டலாக இருக்கும். இந்த படத்தை பொறுத்தவரையில் இயக்குனரும், எடிட்டரும் அவரே என்பதால் 'நைட்ஷோ' டிரைலர் மிரட்டலாக இருக்கிறது. மலையாளம், மராத்தி மொழிகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த கதை தமிழிலும் மாபெரும் வெற்றி பெறும். 'காக்கா முட்டை', 'பாகுபலி' என கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெற்றிபெற்று வரும் இந்த சூழ்நிலையில் இப்படமும் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும்.” என்று நைட்ஷோ படத்தைப் பற்றி வாழ்த்திப்பேசிய சூர்யா புதிய தகவல் ஒன்றையும் சொன்னார்...
“இந்த படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் விஜய் ஏற்கெனவே என்னிடம் இரண்டு கதைகள் சொல்லியிருக்கிறார். ஆனால் நான்தான் அவருக்கு இன்னும் கால்ஷீட் ஒதுக்கவில்லை!'' என்றார்.
விஜய் தற்போது இயக்கி உள்ள இது என்ன மாயம் இன்னும் சில தினங்களில் வெளிவர உள்ளது. அந்தப்படம் வெற்றியடைந்தால் விஜய் படத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.