ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக வெற்றியை அறுவடை செய்த இயக்குநர் ராஜேஷ் எம்., கார்த்தியை வைத்து இயக்கிய அழகுராஜா படத்தில் தோல்வியை சந்தித்தார். அதனால் அவரது கேரியரே கேள்விக்குறியானது. அழகுராஜா படத்தை அடுத்து தன்னுடைய தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் ஜீவா. அழகுராஜா பிளாப் என்றதும் மெல்ல கழன்று கொண்டார் ஜீவா. அதன் பிறகே தன்னுடைய சொந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பை ராஜேஷுக்குக் கொடுத்தார் ஆர்யா. தற்போது ஆர்யாவின் பேனரில் வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கி வரும் ராஜேஷ் எம். அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்க இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே ட்ராப் பண்ணிய புராஜக்ட்டை தூசுதட்டி எடுத்த ஜீவா, அடுத்தப் படத்தை தனக்கே பண்ண வேண்டும் என்று இயக்குநர் ராஜேஷை வற்புறுத்தி வருகிறாராம். வாசுவும் சரவணணும் ஒண்ணா படிச்சவங்க படம் காமெடி சம்பஜெக்ட் என்பதால் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் ராஜேஷின் அடுத்தப் படத்தை நாம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறாராம் ஜீவா. ஒருவேளை ரிசல்ட் நெகட்டிவ்வாக இருந்தால்?