‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டார்லிங் படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
சில் தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகராக அறிமுகமான பென்சில் படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போதைய சூழலில் பென்சில் படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருப்பதால் பென்சில் படம் வெளிவரவே வராது என்ற தகவல் அடிபடுகிறது. எனவே பென்சில் படத்தை மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். தனது நண்பர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்! இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் உடன் இரண்டு பிரபல இயக்குனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்! இன்னொருவர் இயக்குனர் அட்லி! ஜி.வி. நடிப்பில் ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, அட்லி வசனங்களை எழுதுகிறார். ஷங்கர் பெயரில் இன்னொரு இயக்குநர் வர முடியாது என்பதால் இந்தப் படத்தை இயக்கும் ஷங்கரின் பெயர் மாற்றப்பட உள்ளது.