ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
"ஸ்கெட்ச்" சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்குபேர் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு 24 மணிநேரத்தில் ஹீரோவையும், அவரது காஸ்ட்லி காரையும் தூக்க முயற்சிக்கிறார்கள். ஏன்? எதற்காக? தூக்க முயற்சிக்கிறார்கள்...? என்பதுதான் சஸ்பென்ஸ். இவர்களது சூழ்ச்சியை, ஹீரோ கண்டுபிடித்து தப்பித்தாரா? இல்லையா..? என்பதுதான் ஸ்கெட்ச் குறும்படத்தின் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் எல்லாம்!
25 நிமிடங்கள் ஓடக்கூடிய "ஸ்கெட்ச்" குறும்படத்தை எழுதி இருக்கிறார் சாய். இது இவருக்கு முதல் குறும்படம். இந்த குறும்படத்தில் கதாநாயகனாக முருகா, பிடிச்சிருக்கு, கோழிகூவுது உள்ளிட்ட படங்களில் நாயகராக நடித்த வளரும் நாயகர் அசோக் நடித்துள்ளார். இவர் தவிர சுந்தரபாண்டியன் புகழ் காசிமாயன் வில்லனாக நடிக்க., பெரிய திரை காமெடி நடிகர் சுவாமிநாதன், ஷம்மி ஹர்ஷா உள்ளிட்ட இன்னும் சிலரும இக்குறும்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள குறும்படம் இது!.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த "ஸ்கெட்ச்" குறும்படத்திற்கு வெப்ஆப் (WEPOP) என்னும் ஸ்மார்ட்போன்களுக்கான அப்ளிகேசனில் டிரைலரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்த வெப் ஆப் (WEPOP) அப்ளிகேசனை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்து "ஸ்கெட்ச்" பட போஸ்டரை ஸ்கேன் செய்தால் "ஸ்கெட்ச்" குறும்பட டிரைலரை, வீடியோ வடிவில் காணலாம் என்பது இக்குறும்பட டிரைலர் வெளியீட்டில் செய்யப்பட்டிருக்கும் புதுமை!
சூர்யபிரசாத்தின் இசை, பொன் ஷங்கரின் ஒளிப்பதிவு, வரதனின் படத்தொகுப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் திங்பிக் பிக்சர்ஸ் - சாய், ஹெச்.டி. எண்டர்டெய்ன்மெண்ட் - பிரான்ஸ் விவேக், காபிரைட் - சுதர்சன் மூவரும் இணைந்து சாயின் எழுத்து - இயக்கத்தில் "ஸ்கெட்ச்" குறும்படத்தை ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக தயாரித்து சமீபத்தில் சென்னை வடபழனி ஆர்.கே.வி.ஸ்டூடியோ பிரிவியூ தியேட்டரில் மீடியா உலகினர் மற்றும் திரையுலகினருக்கு திரையிட்டு காண்பித்து பெருமிதம் கொண்டனர். இனி, பெரிய திரையை நோக்கித்தான இவர்களது "ஸ்கெட்ச்" இருக்கும் என நம்புவோம்!