ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
"ஜே.ஜே" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா, அஜீத்துடன் "அட்டகாசம்", மாதவனுடன் "தம்பி", ஜீவாவுடன் "பொறி" என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். நடிப்பு திறமை இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. கடைசியாக டைரக்டர் பாலா இயக்கத்தில் வெளிவந்த "நான் கடவுள்" படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடித்தார். வித்யாசமான கேரக்டர் என்பதால் நிச்சயம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் விருதும் கிடைக்கவில்லை, மேற்கொண்டு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மனம் நொந்துபோன பூஜா, சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது பூஜாவை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. பூஜா ஒரு நடிகை மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த மேலாளாரும் கூட. பெங்களூரில் உள்ள முன்னணி ஐ.டி.கம்பெனி ஒன்றில் மேனஜராக பணியாற்றி வருவதாகவும், கம்யூட்டர் இன்ஜினீயர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருங்கால கணவரின் கோரிக்கையை ஏற்று சினிமாவிற்கு முழுக்கு போட்டதாகவும் தெரிகிறது.