‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலக வரலாற்றில் நமக்குத் தெரிந்த வரையில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டுப் படத்தைக் காப்பி அடிக்காமல் 'பணம்' கொடுத்து உரிமை வாங்கி படமாக்கப்பட்டு வருகிறது. மிகப் பெரிய ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ள இந்தப் படத்தை இயக்கி வருபவர் நலன் குமாரசாமி. 'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு இரண்டு, மூன்று கதைகளை எழுதிப் பார்த்த நலனுக்கு எதுவுமே திருப்தியாக அமையவில்லையாம். அதன் பின் சில வருடங்களுக்கு முன் பார்த்து ரசித்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்த ஞாபகம் வந்திருக்கிறது. உடனே, அந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் சொல்ல அவர் 'முறையாக' அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.
உடனடியாக தமிழுக்கேற்றபடி திரைக்கதையமைக்கப்பட்டு, இப்போது படம் ஏறக்குறைய முடியும் தருவாயை நெருங்கி விட்டதாம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க 'பிரேமம் ' மலையாளப் படம் மூலம் சேட்டன்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடித்து வருகிறார். அப்படி என்னதான் அந்த வெளிநாட்டுப் படத்தின் கதை என்றால், “வாழ்க்கையை அதன் வழிலேயே போய் வாழும் ஒரு இளைஞன், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞி, பொருத்தமே இல்லாத இவர்கள் ஒரு புள்ளியில் சந்திக்க நேரிட அதன் பின் நடக்கும் விஷயம்தான் படமாம்”.
ஆனால், இது எந்த வெளிநாட்டுப் படம் என்று நலன் குமாரசாமி இப்போது சொல்லமாட்டாராம். அப்படி சொன்னால், படம் வெளிவருவதற்கு முன்பே என் படம் பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்கிறார். இருந்தாலும் கதை என்னவென்று ஒரு வரியில் சொல்லிவிட்டார். இந்த ஒரு வரி போதாதா, நம் நெட்டிசன்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அது எந்த கொரியா, ஈரானிய, ஜப்பானிய, பிரெஞ்சு, ஆங்கிலப் படம் என்று கண்டுபிடித்து சொல்லிவிட மாட்டார்களா ?.
ரெடி ஸ்டார்ட்...!