‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டின் முன்னணி நடிகரும் நடிகை அமலாவின் கணவருமான நாகார்ஜுனாவிற்கு தெலுங்கு திரை உலகில் அதிக ரசிகர்கள் பலம் உள்ளது. அதனை மீண்டும் ஒரு முறை நாகார்ஜுனா ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். நாகார்ஜுனா டுவிட்டரில் தினமும் தனது கருத்துகளை பகிர்ந்து வருகின்றார். தற்போது நாகார்ஜுனாவை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டுள்ளது.டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவையும் டுவிட்டரில் ஒரு மில்லியன் ரசிகர்கள் பின்தொடருகின்றனர்.இவர்கள் இருவரையும் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் உட்பட பல பிரபலங்களும் ரசிகர்களும் பின் தொடருகின்றனர். நடிகர் நாகார்ஜுனா தற்போது நடிகர் கார்த்தி உடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றார். மேலும் சில தெலுங்கு படங்களை தயாரித்தும் வருகின்றார்.