கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் |
திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த விதார்த் மைனா படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு முதல் இடம், கொள்ளைக்காரன், மயிலு, ஜன்னல் ஓரம், வீரம், வெண்மேகம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, ஆள், காடு படங்களில் நடித்தார். தற்போது உலா, விழித்திரு, காட்டுமல்லி படங்களில் நடித்து வருகிறார். விதார்த்திற்கும் பழனியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவானந்தம், மணிமேகலை தம்பதிகள் மகள் காயத்ரிதேவிக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தது. மணக்கள் வரவேற்பு விழா நேற்று இரவு சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.
மணமக்களை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் விஷால், கார்த்தி, சந்தானம், ரமணா, கருணாஸ். நாசர், பாபி சிம்ஹா, மிர்சி சிவா, பார்த்திபன், விமல், பிரசன்னா, ஆரி, கருணாஸ், மனோஜ் பாரதி, ராஜேஷ், தம்பி ராமய்யா, இளரவசு, ஜெயம்ரவி, மன்சூரலிகான், சூரி, நடிகை அமலா பால், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜா, சேரன், டி.ராஜேந்தர், ஏ.எல்.விஜய், கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், சுசீந்திரன், வெங்கட்பிரபு, பிரபு சாலமன், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், சற்குணம், சுந்தர்.சி, கரு.பழனியப்பன், கிருஷ்ணா, இசை அமைப்பாளர் ஜிப்ரான், விஜய் ஆண்டனி, இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர் கிரிஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, துணை தலைவர் தேனப்பன், ஏவிஎம்.சரவணன், தனஞ்செயன், ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், ஸ்டூடியோ 9 சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.