ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
திருமணமாகி செட்டிலாகிவிட்ட சினேகா, மீண்டும் நடிக்க வந்தாலே ஆச்சர்யம்.. இதில் மூன்று இளைஞர்களை ரொமான்ஸ் பண்ணும் கதையா என உங்கள் மனதில் எழும் கேள்வியை உடனே ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இது 'குஞ்சிராமாயணம்' என்கிற மலையாளப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள சினேகா உன்னிகிருஷ்ணன் பற்றிய தகவல்.. பஷில் ஜோசப் இயக்கும் இந்தப்படத்தில் வினீத் சீனிவாசன், அவரது தம்பியான தயன் சீனிவாசன் மற்றும் அஜு வர்கீஸ் என மூன்று பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
இதில் கதைப்படி தயன் சீனிவாசனுக்கும் சினேகாவுக்கும் தான் லவ்.. ஆனால் திருமணம் நிச்சயமாவதோ வினீத் சீனிவாசனுடன்.. இறுதியில் திருமணம் நடப்பதோ அஜு வர்கீசுடன்.. இது எப்படி இருக்கு..? எண்பதுகளில் நடக்கும் கதையாக இந்தப்படம் தயாராகிவருகிறது. இந்தப்படத்தில் அஜு வர்கீசுடன் நடிக்கும் காட்சிகளில் தான் மிகுந்த சிரமப்பட்டாராம் சினேகா.. பின்னே இயல்பிலேயே காமெடி நடிகரான அஜு வர்கீஸ் ஸ்பாட்டில் கேமரா முன்னாடி நின்றதும் சில புதுப்புது பிட்டுகளை எடுத்துப்போட, சிரிப்பை அடக்கமுடியாமல் பலமுறை டேக் வாங்கினாராம் சினேகா உன்னிகிருஷ்ணன்.