ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
களவாணி படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா, கலகலப்பு படத்திற்கு பிறகு பக்கா கமர்சியல் நாயகியாகவும் உருவெடுத்தார். அதன்பிறகு மதயானைக்கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே என சில படங்களில் நடித்தவருக்கு பின்னர் படமே இல்லை. அதனால் ஒரு இந்தி படத்தில் நடிக்கச்சென்றார். ஆனால் அடுத்தபடியாக அங்கேயும் படமில்லை.
மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பி வந்தவருக்கு த்ரிஷா நடிக்கும் போகி படத்தில் ஒரு வேடம் கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் பூனம் பாஜ்வாவும் நடிக்கிறார். ஆக, த்ரிஷா லீடு ரோலில் நடிக்க, பூனம்பாஜ்வா, ஒவியா இருவரும் அவரது தோழிகளாக நடிக்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாக வேண்டும் என்று நினைக்கும் ஓவியா, மதயானைக்கூட்டம் படத்தில் நடித்து வந்தபோது 20 லட்சம் வரை சம்பளம் கேட்டவர், இப்போது 10 லட்சம் கொடுத்தாலும் நடிக்கிறேன் என்கிறாராம். ஆனால் அப்படி தான் நடிக்கும் படத்தில் ஹீரோ பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் களிடம் கூறி வருகிறார் ஓவியா.