போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் தனுஷுக்கும், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டுகொண்டே போகிறது. சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பதால் தன்னை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஏதும் செய்ய மாட்டார் என்று நினைத்தார் தனுஷ். அவரது எண்ணத்துக்கு மாறாக, தனுஷுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக பேசத்தொடங்கிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்குமார். இது தனுஷை எரிச்சல்படுத்தி உள்ளதோடு, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு எதிராக அடுத்தடுத்த வேலைகளையும் செய்யத் தூண்டிவிட்டது.
ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியிலிருந்து வெற்றிமாறனை பிரித்த தனுஷ் அடுத்த கட்டமாக ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர உள்ள த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் ஆடியோ வெளியாகும் அதே தினத்தில் தான் நடித்த மாரி படத்தின் ஆடியோவை வெளியிட காத்திருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல த்ரிஷா இல்லைனா நயன்தாரா படம் ரிலீஸ் அன்று மாரி படத்தையும் வெளியிட எண்ணி உள்ளாராம்.
இப்படி செய்வதன் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்பது தனுஷின் எண்ணம்.