‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் - இசையமைப்பாளர் இமான் - சிவகார்த்திகேயன் ஆகியோர் இணைந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'ரஜினி முருகன்'. இப்படத்தின் சிங்கிள் டிராக்கான 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோவையும் யு டியூபில் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தயிருப்பது உண்மைதான். அப்போதைக்கு அப்போது உள்ள டிரென்ட் படி ஒரு படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் சரியான விஷயமும் கூட. அப்படி இந்தப் படத்தின் மேக்கிங்கில் சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் 'டப்ஸ்மாஷ்' வீடியோவையும் இணைத்திருப்பது அந்தப் பாடலுக்கான சுவாரசியத்தை மேலும் கூட்டியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பேசப்பட்ட 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' என்ற ஒரு வரியை, மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் கிண்டலடிக்க, அந்த 'டயலாக்' அப்படியே பரபரப்பாக இன்று வரை பேசப்படும் ஒன்றாகிவிட்டது. அதையே இந்தப் பாடலின் பல்லவியாக வைத்து விட்டார்கள். இந்த பாடல் மேக்கிங்கில் படத்தின் இயக்குனர் பொன்ராம், நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் சூரி, பாடலை எழுதிய யுகபாரதி ஆகியோருடன் பாடலைப் பாடியுள்ள இமானும் கொஞ்சம் நடித்து சுவாரசியத்தைக் கூட்டியுள்ளார்.
அத்துடன் இணைக்கப்பட்டுள்ள 'டப்ஸ்மாஷ்' வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத், நகைச்சுவை நடிகர் சதீஷ், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஸ்ரீதிவ்யா, விமல், பாபி சிம்ஹா, திவ்யதர்ஷினி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, வைபவ், கருணாகரன், சமுத்திரக்கனி, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ளனர். இன்னும் கொஞ்ச நாளைக்கு இதுவும் ஹிட் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும்.