‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியத் திரையுலகில் வேறு யாரும் செய்யாத ஒரு சாதனையையும், புதிய முயற்சிகளையும் செய்து வருபவர் அமிதாப் பச்சன். அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அப்படிப்பட்ட கதைகளையும், படங்களையும் மக்கள் பார்க்கும் விதத்தில் தன்னுடைய நடிப்பாலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பிக்கு' படம் அவருடைய நடிப்பால் மிகவும் ரசிக்கப்பட்டு திரையுலகத்தைச் சேர்ந்த பலரையும் மிரள வைத்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி போன்றவர்கள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களில் அமிதாப் துணிச்சலாக நடிப்பதுதான் அதற்குக் காரணம்.
அமிதாப்பைப் பாராட்டும் பல திரையுலகப் பிரபலங்களின் பட்டியலில் சமீபத்தில் ராதிகாவும் இணைந்துள்ளார். “அமிதாப் ஜி, நீங்கள் இந்தியாவின் நடிகர். கோபமான இளம் மனிதனிலிருந்து கோபமான முதுமையான மனிதனாக உங்கள் நடிப்பு பாராட்டுக்குரியது. 'பிக்கு' மிக அற்புதமான படம், உங்களின் நடிப்பு மிகச் சிறந்த நடிப்பு,” என ராதிகா பாராட்டியுள்ளார். அமிதாப்பச்சனுடன் இணைந்து ராதிகா “ஆஜ் கா அர்ஜுன், லால் பாட்ஷா” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.