போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
2015ம் ஆண்டில் எதிர்பாராமல் பெரிய வெற்றி பெற்ற படங்களில் மூன்று பேய்ப் படங்கள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. 2015ம் ஆண்டு ஆரம்பித்து சுமார் ஐந்து மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபகரமான படங்களாக மூன்று பேய்ப் படங்கள் அமைந்துள்ளன.
பொங்கலுக்கு வெளிவந்த 'டார்லிங்', ஏப்ரல் 17ம் தேதி வெளிவந்த 'காஞ்சனா 2', கடந்த வாரம் வெளிவந்த 'டிமான்ட்டி காலனி' ஆகிய மூன்று பேய்ப் படங்களும் எதிர்பார்ப்புகளை மீறி வெற்றிப் படங்களாக அமைந்துள்ளதென கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
'டார்லிங்' படம் “ஐ, ஆம்பள” படங்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றது. 'காஞ்சனா 2' படம் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 'டிமான்ட்டி காலனி' படம் வெளிவருவதற்கு முன் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பெரிய விளம்பரம் இல்லாமல் திடீரென வெளிவந்தது. கடந்த வாரம் மேலும் ஆறு படங்களுடன் வெளிவந்த இந்தப் படம் வேறு எந்தப் படமும் சரியாக இல்லாத காரணத்தால் வெற்றி பெற்றது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் 'மாசு என்கிற மாசிலாமணி' படம் மூலம் மீண்டும் பேய் ரிலீஸ் தொடர்கிறது.