‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கும்கி படத்தில் அறிமுமான லட்சுமி மேனன், செம ராசியான நடிகை. அவர் பேரழகி இல்லை. ஆனால் எளிமையான அழகு. பக்கத்துவீட்டு முகம். அதனாலேயே அவரை எல்லோருக்கும் பிடித்து விட்டது. அதோடு அதிர்ஷ்டம் அவர் பக்கம் நிற்க அவர் நடித்த பாண்டியநாடு, மஞ்சப்பை, கொம்பன், நான் சிகப்பு மனிதன், சுந்தரபாண்டியன் என நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். இப்போது அஜீத்துடன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் "எனக்கு பாவாடை தாவணி அணியும் கிராமத்து கேரக்டர்களாகவே வருகிறது. அதனால் நடிப்பை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தப்போகிறேன்" என்று ஒரு பேட்டியை தட்டிவிட பரபரத்தது மீடியா. எனவே அவரது படிப்பை டார்க்கெட் செய்தது. படிப்பா நடிப்பா என்ற பட்டிமன்றமே நடந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்ளுக்கு முன்பு பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியாக யாரோ ஒரு லட்சுமி மேனன் பெயிலாக, இவர் பெயிலானதாக பரபரவென செய்தி பரவியது. "அய்யோ நான் படிப்பது சிபிஎஸ்இ ஸ்கூல். ரிசல்ட் வந்திருப்பது ஸ்டேட்போர்டு" என்று கதறினார் லட்சுமி மேனன். பரபரப்பு அடங்கியது.
நேற்று வெளியான சிபிஎஸ்இ தேர்வு முடிவில் லட்சுமிமேனன் பாஸாகி விட்டார். நாட்டுக்கு தேவையான நல்ல செய்தி வெளியானதும் லட்சுமி மேனனும், மீடியாக்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பாஸாகி விட்ட சந்தோஷத்தை தனது தோழிகள், நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்களுடன் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டார் அதில் தான் படித்த கொச்சி திருவங்குளம் பவன்ஸ் வித்யா மந்திர் பள்ளி ஆசிரியைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
லட்சுமி மேனன் படித்தது வணிகவியல் பாடப் பிரிவு. அதில் பாஸாவது எளிமையானது என்பதையெல்லாம் விட்டு விடுங்கள். அடுத்து அவர் பெங்களூரில் உள்ள பிரபலமான பேஷன் டிசைனிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கப்போகிறார். மொத்தமே ஆண்டுக்கு 100 நாள் நேரடியாக கிளாசுக்கு போனால் போதும் மற்ற நாட்கள் எல்லாம் பிராக்டிக்கல்தான். அதனால் இதனை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தவும் முடிவு செய்திருக்கிறார். எப்படியோ லட்சுமி மேனன் ஹேப்பி அண்ணாச்சி...