ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஆர்யா என்றாலே ரொமான்டிக் நாயகன் என்றாகி விட்டது. ஆனால் அவரோ, இதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் செட்டாகும். அதனால் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆக்சன் ஹீரோவாகி விட வேண்டும் என்று மீகாமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் பாணியிலேயே இப்போது காமெடி கலந்த காதல் கதைகளாக செலக்ட் பண்ணி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், சமீபகாலமாக டார்லிங், காஞ்சனா-2 என பேய் படங்களே வெற்றி பெற்று வருவதால் அவரது கவனமும் திகில் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறது. முக்கியமாக சூர்யாகூட மாஸ் படத்தில் திகிலுக்கு மாறியிருப்பதால், ரசிகர்கள் விரும்பும் பாதைக்கு நாமும் மாறி விடுவோம் என்று ஜீவா சங்கர் சொன்ன ஒரு திகில் கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஆர்யா. அதோடு, இதுவரை பெண் பேய்களே ஆக்ரமித்து வந்த நிலையில், தற்போது கமரகட்டு, டிமான்டி காலனி போன்ற படங்களில் ஆண் பேய்கள் களமிறங்கியருப்பதை அடுத்து, ஆர்யாவும் பேயாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.