ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
வாலு, ரோமியோ ஜூலியட், புலி என ஹன்சிகாவின் நடிப்பில் மூன்று படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில் வாலு படத்தில் அவர் மட்டுமே நாயகி என்றபோதும், ரோமியோ ஜூலியட்டில் பூனம் பாஜ்வாவுடனும், புலியில் ஸ்ருதிஹாசனுடனும் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படங்களைத் தொடர்ந்து அரண்மனை-2, இதயம் முரளி படங்களில் நடிக்கும் ஹன்சிகாவுக்கு, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சிங்கம்-3 படத்திலும் நடிக்கும் ஆர்வம் ஏற்பட, அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால் ஸ்ருதிஹாசன் அதற்கு முன்பே கமிட்டாகி விட்டதால் ஹன்சிகாவின் முயற்சி ஒர்க்அவுட்டாகவில்லை.
அதனால் இப்போது அரண்மனை-2 படத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார் ஹன்சிகா. இதே படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்க, தற்போது ஹன்சிகா கமிட்டாகியிருக்கும் பேய் வேடத்தில் நடிக்க லட்சுமிராய் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அரண்மனை படத்தில் ஹன்சிகாவே பேய் வேடத்தில் நடித்திருந்ததால் அவருக்கே முன்னுரிமை கொடுத்து விட்டாராம் சுந்தர்.சி.,