ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் விஷால் முற்றிலும் வித்தியாசமானவராக உள்ளார். அவருக்குப் பக்கபலமாக மற்ற இளம் நடிகர்கள் இருப்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் கோலிவுட்டினர். தன் தம்பி விக்ராந்தைக் கூட கை கொடுத்து தூக்கி விடாமல் விஜய் இருக்கும் போது, விக்ராந்தின் நண்பரான விஷால், 'பாண்டிய நாடு' படத்தில் நல்ல வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், மற்ற நடிகர்களுக்கு ஆதரவு தருவதிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறார் என்கிறார்கள். இளம் வயதிலேயே சொந்தப் படக் கம்பெனியை ஆரம்பித்து வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார். இதனிடையே விஷால் தற்போது நடித்து வரும் 'பாயும் புலி' படம் சிவகங்கை மாவட்டத்தில் 2012ல் நடந்த மோதல் சம்பவங்களில் ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் பற்றிய கதை என்கிறார்கள்.