ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள் 'இனிமே இப்படித்தான்' படம் ஜுன் மாதம் 12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் இது. அந்தப் படத்தில் ஜோடியாக நடித்த ஆஷ்னா மீண்டும் சந்தானத்துடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆஷ்னா கிளாமரில் கலக்கியுள்ளாராம். ஒரு அழகான பெண் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதைதான் இந்தப் படம்.
சந்தானம் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சாதாரண நடிகராக நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிட் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த தன்னுடைய நண்பர்களான முருகன், பிரேம் ஆனந்த் ஆகியோரை 'இனிமே இப்படித்தான்' படம் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன் ஆகியோரையும் சந்தானம் அறிமுகப்படுத்துகிறார்.
தயாரிப்பாளராக தன்னுடைய சொந்தப் பணத்தைப் போட்டு முதன் முறையாக படத்தைத் தயாரிக்கும் சந்தானம் இந்தப் படத்தை நிறையவே எதிர்பார்க்கிறார். தொடர்ந்து சில முக்கிய இயக்குனர், நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற படங்களில் அவர் நாயகனாகவும் நடிக்க முடிவு செய்துள்ளார்.