போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டோலிவுட்டில் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்று(மே 14 ஆம் தேதி) திரைக்கு வந்துள்ளது. மே 1-ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட லயன் படம் சில பல தாமதங்களுக்கு பின்னர் இன்று திரைக்கு வந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையங்குகளைக் கைப்பற்றியுள்ள லயன் படம் தமிழகத்திலும் கணிசமான திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. அதுமடுமல்லதாது லயன் படம் அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் வெளிவந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படம் அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது. தயாரிப்பாளர் ரகுபதி ரமணா ராவ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார்.