‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் அஜித்தின் தங்கை கதாபாத்திரம் என்றதும் அதற்கு லட்சுமி மேனன் உடனே சம்மதித்து விட்டார். பல ஹீரோயின்கள் அஜித் படத்தில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது லட்சுமி மேனனுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு சிலருக்கு கண்டிப்பாக பொறாமையை ஏற்படுத்தியிருக்கும். +2 படிப்பை முடித்த பின் மீண்டும் சுறுசுறுப்பாக புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் லட்சுமி மேனன். அதில் முதல் படமாக அஜித் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.