ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
வருண்மணியன் உடனான திருமண ஒப்பந்தம் முறிந்துவிட்டதால் முன்னைவிட அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா. 'என்னை அறிந்தால்' படத்தைத் தொடர்ந்து அப்பாடக்கர் படத்தில் நடித்து முடித்தவர் தற்போது 'போகி' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. போகி படத்தில் த்ரிஷா தவிர ஓவியா, பூனம் பாஜ்வா என மேலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை த்ரிஷாவுடன் ஓவியா, பூனம் பாஜ்வாவுக்கு பழக்கம் இல்லையாம். இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்த போது அனைவரும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனராம். இது குறித்து ஓவியா சமீபத்தில் மனம் திறந்துள்ளார். அதில்... ''த்ரிஷா போன்ற ஒரு பெரிய நடிகை இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. செட்டில் அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறார். அதோடு குறித்த நேரத்திற்கு சரியாக படப்பிடிப்பில் ஆஜராகிவிடுகிறார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்று வருகிறேன். என்னுடன் பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு சில அறிவுரைகளும் அவர் எனக்கு வழங்கியுள்ளார்!'' என குறிப்பிட்டுள்ளார். போகி - காமெடி த்ரில்லராக உருவாகிவரும் படமாம்.