தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சமீபத்தில் வெளிவந்த சன்ஆப் சத்யமூர்த்தி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து இருப்பதால், அடுத்த படத்தை மிகுந்த கவனத்தோடு உருவாக்கி கொண்டு இருக்கின்றனர். ஹீரோ அல்லு அர்ஜுனும் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் புதிய படத்தை அவருடைய அண்ணனான அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். ஆக்ஷன் படங்களில் முத்திரை பதித்து வரும் பிரபல இயக்குனரான போயபடி ஸ்ரீனு இயக்குகிறார். பொதுவாகவே போயபடி படம் என்றாலே சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் தான் இயக்கும் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு புதுசு, புதுசாக ஆயுதங்களை கொடுப்பதில் இயக்குனர் போயபட்டிக்கு நிகர் அவரே. குறிப்பாக அவர் இயக்கிய லெஜண்ட் மற்றும் லயன் படங்களில் நந்தமூரி பாலகிருஷ்ணா பயன்படுத்திய ஆயுதங்களை பற்றி புகழ்ந்து பேசாதவர்களே இல்லை. இந்த புதிய படத்திற்காக ஸ்டைலிஷ் ஸ்டார் கையில் புதுமையான ஆயுதத்தை கொடுத்து எதிரிகளை துவம்சம் செய்ய இயக்குனர் தயாராகி விட்டார்.