‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டோலிவுட்டின் மூத்த பிரபல ஹீரோவான மோகன் பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நான்கு ஜோடிகள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கூட ஒரு படத்தில் இது போல நான்கு ஜோடிகள் அமையப்பட்டதில்லை. இன்றைய காலகட்டத்திலும் மோகன் பாபுவுக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. சமீபத்தில் மோகன் பாபு ஒரு மராத்தி மொழி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். அந்த படத்தின் கதையில் தான் நடிக்கப்போகிறாரா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அந்த புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னாள் நாயகிகளான ரம்யா கிருஷ்ணன், நக்மா, பூமிகா மற்றும் சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதன் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவருகின்றது. இதன் மூலம் முன்னாள் நடிகைகளின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.மோகன் பாபு தற்போது தனது மகன் மஞ்சு மனோஜின் திருமண வேலையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அநேகமாக திருமணம் முடிந்த உடன் அவர் புதிய படத்தை தொடங்குவார் என்று தெரிகிறது.